உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நந்தா பாலிடெக்னிக்கில் கேம்பஸ் இன்டர்வியூ

நந்தா பாலிடெக்னிக்கில் கேம்பஸ் இன்டர்வியூ

ஈரோடு:ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லுரியில், சென்னை டி.வி.எஸ்., நிறுவனத்தின் சார்பு நிறுவனமான பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில், வளாகத்தேர்வு நடந்தது. ஸ்ரீநந்தா அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார்.பிரேக்ஸ் இந்தியா நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் லட்சுமி நாராயணன், தனது குழுவினருடன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மூன்றாண்டு கால பயிற்சி, அதற்குரிய உதவித்தொகையும் வழங்கப்படும் என்றார். பின்னர் மாணவர்களுக்கு ஆன்-லைனில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முக தேர்வில் பங்கு பெற்று வேலை வாய்ப்புக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை