உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சங்கிலி கருப்பன் பண்டிகை விழா

சங்கிலி கருப்பன் பண்டிகை விழா

தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே, நேற்று சங்கிலி கருப்பன் பண்டிகை உற்சாகமாக நடைபெற்றது. தாராபுரம், அலங்கியம் ரோடு பகுதியில் உள்ள சீத்தக்காடு சங்கிலி கருப்பன் கோவில் பண்டிகையை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் சாமி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை, சங்கிலி கருப்பன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ