உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவிரியில் தண்ணீர் திறப்பால் இடம் பெயர்ந்த கரையோர மக்கள்

காவிரியில் தண்ணீர் திறப்பால் இடம் பெயர்ந்த கரையோர மக்கள்

பவானி: மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர், ௮௧ ஆயிரம் கன அடி நேற்று மாலை காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் பவானியில் கரையோர பகுதியில், புது பஸ் ஸ்டாண்ட் அருகில் கந்தன் நகர், அந்தியூர் பிரிவு பகுதியில், பசுவேஸ்வரர் மீனவர் தெருவில் வசிக்கும் மக்கள், மேடான பகுதிக்கு செல்ல, நகராட்சி நிர்வாகம், வரு-வாய்த்துறை, போலீசார் அறிவுறுத்தினர். இதன்படி வீடுகளில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நேற்-றிரவு பீரோ, கட்டில், டிவி உள்ளிட்ட பொருட்-களை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளி-யேறி மேடான பகுதிக்கு சென்றனர்.கந்தன் நகர், மீனவர் தெரு பகுதிகளை சேர்ந்த, 90க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வீட்டை காலி செய்து வெளியேறினர். இவர்களுக்கு பவானி நகராட்சி சார்பில், உணவு வழங்கப்பட்டது. இதேபோல் அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களும் வெளியேற்றப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை