உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீர் நிர்வாகத்தில் தவறு செய்யும் மாவட்ட நிர்வாகம் கீழ்பவானி விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாக புகார்

நீர் நிர்வாகத்தில் தவறு செய்யும் மாவட்ட நிர்வாகம் கீழ்பவானி விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாக புகார்

ஈரோடு:நீர் நிர்வாகத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் தவறு செய்வதால், கீழ்பவானி விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுபற்றி ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் ஈ.வி.கே.சண்முகம், முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரால், கீழ்பவானி பாசனப்பகுதியில், 2.07 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் முறையாக மாவட்ட நிர்வாகம் நீர் நிர்வாகத்தை திட்டமிடாமல், கீழ்பவானி பாசனத்துக்கான தண்ணீரை குறைத்து வழங்கியும், நிறுத்தியும் பயிர்கள் பாதிப்படைய செய்கின்றனர். தற்போது, பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைவாகவும், நீர்வரத்து குறைவாகவும் உள்ள நிலையில் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கும், காளிங்கராயன் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.ஆக., 15ல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், பருவமழை, அணைக்கான நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே நீர் திறப்பு சாத்தியமாகும். கீழ்பவானி வாய்க்காலில், இரண்டாம் போகத்துக்கு, ஐந்து நனைப்புக்கு தண்ணீர் தர அரசாணை வெளியிட்டு, நான்காம் நனைப்புக்கு, இரு நாட்கள் முன்னதாகவே தண்ணீரை நிறுத்தி, ஐந்தாம் நனைப்புக்கு தர மறுத்ததால், பல நுாறு ஏக்கர் பயிர் நாசமானது.தற்போதும் அதே தவறை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. கீழ்பவானி பாசன திறப்புக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், அனைத்து தரப்பு விவசாயிகளும், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்தும், இருப்பும் உயர்ந்த பின் திறக்கலாம் என யோசனை தெரிவித்த நிலையில், இரண்டாம் பாசனத்துக்கு மட்டும் நீர் திறப்பு என்பது கீழ்பவானி விவசாயிகளை வஞ்சிப்பதாகும். இதுபற்றி முதல்வர் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி