உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மணமான 2 பெண்கள் மாயம்

மணமான 2 பெண்கள் மாயம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கோட்டுவீராம்பாளையம், சின்ன தேவாங்கபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். நெசவு தொழிலாளி-யான இவரின் மனைவி மிருதுளா. தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மிருதுளா மொபைல்போனில் ஆண் நண்ப-ருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதையறிந்து மணிகண்டன் கண்டித்ததால் மிருதுளா மாயமாகி விட்டார். ஒரு சவரன் தாலி, நான்கு பவுனில் தங்கச்சங்கிலி அணிந்திருந்தாராம். மணிகண்டன் புகாரின்படி, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.* சத்தி, செண்பகபுதுார், தங்கநகரத்தை சேர்ந்த பழனிச்சாமி மனைவி நித்யா, 35; இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. திருப்பூரிலுள்ள கோவிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினர். சிறிது நேரத்தில் நித்யாவை காண-வில்லை. பழனிச்சாமி புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ