உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.4.76 கோடி மதிப்பிலான திட்டப்பணி துவக்கம்

ரூ.4.76 கோடி மதிப்பிலான திட்டப்பணி துவக்கம்

காங்கேயம்: காங்கேயம் யூனியன் ஆலம்பாடி ஊராட்சியில், 12.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடை; பரஞ்சேர்வழி ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 4.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு புதிய திட்டப்பணிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பழனிச்சாமி, காங்கேயம் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கருணைபிரகாஷ், சிவானந்தன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை