உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு கலை அறிவியல் கல்லுாரிக்கு தேசிய தர மதிப்பீட்டு நிறுவன சான்று

ஈரோடு கலை அறிவியல் கல்லுாரிக்கு தேசிய தர மதிப்பீட்டு நிறுவன சான்று

ஈரோடு: ஈரோடு, ரங்கம்பாளையத்தில் உள்ள, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம் (நாக்) சார்பாக கடந்த மாதம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கல்லுாரி சேர்க்கை விபரம், தேர்ச்சி விபரம், ஆசிரியர்களின் தகுதி மற்றும் செயல்பாடு, கல்லுாரி கட்டமைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தனர். இதன்படி கல்லுாரிக்கு ஏ பிளஸ் (A+) அங்கீகார தர சான்றிதழ் வழங்கி தேசிய தர மதிப்பீட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மொத்தம், 4 புள்ளிகளுக்கு, 3.48 புள்ளிகளை (சி.ஜி.பி.ஏ.,) கல்லுாரி பெற்றுள்ளது. ஏ பிளஸ் அங்கீகாரம் பெற்றதற்கு கல்லுாரி ஆசிரியர்கள், உள் மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர், பொறுப்பாளர்கள், ஆசிரியரல்லாத பணியாளர், மாணவ--மாணவியர், முன்னாள் மாணவர்களை கல்லுாரி செயலாளர் பாலுசாமி, நிறுவன தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் விஜயகுமார், கல்லுாரி முதல்வர் சங்கர சுப்பிரமணியன், இயக்குனர் வெங்கடாசலம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ