| ADDED : ஏப் 18, 2024 01:29 AM
சென்னிமலை, சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு கிராமத்தில், 200 ஆண்டுகள் பழமையான மஹா மாரியம்மன் கோவில் உள்ளது. கும்பாபிேஷகம் செய்து 20 ஆண்டுகள் ஆகி விட்டதால் கோவில் கருவறையை புதுப்பித்தும், கோபுரம், மஹா மண்டபம் வர்ணம் தீட்டப்பட்டு புது பொலிவோடு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.அருகில் உள்ள மாகாளியம்மன் கோவில் புதியதாக நிர்மானம் செய்யப்பட்டு, மஹா மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கும்பாபி ேஷக விழா வரும், 22 காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. அதற்காக பூஜை வழிபாடுகள் நாளை இரவு 8:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கிராம சாந்தியுடன் தொடங்குகிறது. 20 காலை கணபதி யாகம், தன பூஜை, மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை ஆரம்பமாகிறது. 21 காலை இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. அன்று மாலை மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. 22 காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, கலச புறப்பாடு நடக்கிறது. 9:00 மணிக்கு மேல் மஹா மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபி ேஷகம் நடக்கிறது.பிரமலிங்கேஸ்வரர் கோவில் பரம்பரை அர்ச்சகர் அமிர்தலிங்க சிவாச்சாரியார் தலைமையில், சிவாச்சாரியார்கள் கும்பாபி ேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.