உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜம்பை அரசு சுகாதார நிலையத்துக்கு அச்சத்துடன் செல்லும் நோயாளிகள்

ஜம்பை அரசு சுகாதார நிலையத்துக்கு அச்சத்துடன் செல்லும் நோயாளிகள்

பவானி: பவானி அருகே ஜம்பை டவுன் பஞ்., அலுவலகம் எதிரில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஜம்பை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து செல்கின்றனர்.தற்போது பவானி--அத்தாணி ரோட்டில், சாலை விரிவாக்க பணி, மழைநீர் வடிகால் கட்டுமான பணி நடக்கிறது. இதில் கடந்த மாதம் பவானி-அத்தாணி ரோட்டிலிருந்து ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் வழியில், வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டினர்.அதன்பின் கட்டுமான பணி மந்தமாகி விட்டது. இதனால் சுகாதார நிலையத்துக்கு செல்ல, ஒரு கி.மீ., தொலைவு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. இரு வாரங்களுக்கு முன், வடிகாலின் பக்கவாட்டு கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்ட நிலையில், நடைபாதை கட்டுமான பணி நடக்கவில்லை. இதனால் சுகாதார நிலையத்துக்கு சுற்றிச் செல்லும் நிலை தொடர்கிறது. இதற்கிடையே கான்கிரீட் தடுப்பு சுவரின் கம்பிகள் நீட்டிக்கொண்டுள்ள நிலையில், அதன் மீது போடப்பட்டுள்ள பலகை மீதேறி, நோயாளிகள், மக்கள், மருத்துவமனை ஊழியர்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். கொஞ்சம் தடுமாறினாலும், தவறினாலும் கம்பிகள் மீது விழும் அபாயம் உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் வழித்தடத்தில் கட்டுமான பணியை விரைந்து முடிக்க நோயாளிகள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை