ஆணைய அதிகாரிகளை பணி நீக்கம் கோரி மனு
ஈரோடு : தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின், ஈரோடு மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம், ஈரோடு கலெக்டர் மூலமாக, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு:பருவம் தவறிய மழை, திடீர் வெள்ளம், கடும் வறட்சி, கடும் வெப்பம் உள்ளிட்ட இயற்கை சீரழிவுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாசனத்திற்கான தண்ணீர் எடுக்கப்படும் மண்ணை விஷமாக்கி, உணவை நஞ்சாக்கி, ஆறுகளை மணல் குவாரிகளாகவும், மலைகளை உடைத்தும் தொழிற்பேட்டை என்ற பெயரில் சுற்றுச்சூழல் சீரழிப்புக்கு உறுதுணையாக, லஞ்சம் பெற்றுக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு, பெரும் கேட்டை விளைவித்து வரும், தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அதிகாரிகளை, கூண்டோடு பணி நீக்கம் செய்து, நேர்மையான அலுவலர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.