உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவியை தாக்கிய கணவனுக்கு காப்பு

மனைவியை தாக்கிய கணவனுக்கு காப்பு

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் லட்சுமி 37; இவரின் கணவர் ஈஸ்வரன், 37; லட்சுமி கூலி தொழிலாளி. ஈஸ்வரன் சத்தி பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்கிறார். தினமும் குடிபோதையில் லட்சுமியை சந்தேகப்பட்டு பேசியுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாய் தகராறில், லட்சுமியை கத்தியால் கிழித்துள்ளார். பலத்த காயமடைந்த நிலையில், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பான புகாரில், பங்களாப்புதுார் போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை