உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ஈரோடு : சிறுவலுார் அருகே, ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது செய்யப்பட்டார். குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாருக்கு, சிறுவலுார் அடுத்த மல்லிபாளையத்தில் இருந்து நம்பியூர் சாலை அயலுார் பகுதியில், மாருதி ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக தகவல் கிடைத்தது. அயலுார் பஸ் ஸ்டாப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 12 மூட்டைகளில், 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி, வேனை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்திய கோபி கரட்டுபாளையம் கோரமடை, வடக்கு வீதி நவநீத கிருஷ்ணனை, 39, கைது செய்தனர். பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை பெற்று குன்னத்துார், நம்பியூர் பகுதியில் தங்கி வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு, கூடுதல் விலைக்கு ரேஷன் அரிசி விற்றது விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ