உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாறைகளாக காட்சியளிக்கும் சடையம்பாளையம் மழை நீர் சேகரிப்பு குளம்

பாறைகளாக காட்சியளிக்கும் சடையம்பாளையம் மழை நீர் சேகரிப்பு குளம்

ஈரோடு: ஈரோட்டில் உள்ள, பெரிய சடையம்பாளையம் மழை நீர் சேக-ரிப்பு குளம் பாறைகளாக காட்சியளிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட, பெரிய சடையம்பாளை-யத்தில் மழை நீர் சேகரிப்பு குளம் உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் மற்றும் மழை நீரே இக்குளத்துக்கு பிரதான நீர் வரத்தாகும். கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லை. கீழ்பவானி வாய்க்காலில் நீரோட்டமும் இல்லை. இதனால் பெரிய சடையம்-பாளையம் குளத்துக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது. தற்-போது குளம் பாறைகளாக காட்சியளிக்கிறது.இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில்,' இப்பகுதி நிலத்தடி நீர் மேம்பாட்டுக்கு இக்குளம் ஆதாரமாக உள்ளது. போதிய நீர் வரத்து, மழை இல்லாததால் குளம் படிப்படியாக வற்றி தற்-போது பாறையாக காட்சியளிக்கிறது. இதே நிலை நீடித்தால், இப்-பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கேள்விக்குறியாகி விடும். மழை அல்லது கீழ்பவானி வாய்க்காலில் நீரோட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை