உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா பொருள் விற்பனை?அந்தியூரில் சோதனை

குட்கா பொருள் விற்பனை?அந்தியூரில் சோதனை

அந்தியூர்;அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பெட்டிக்கடை, மளிகை கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என்று, அவ்வப்போது அந்தியூர் போலீசார், சோதனை செய்து வருகின்றனர். இந்த வகையில், அந்தியூர் அருகே பெருமாபாளைம் பகுதியில் உள்ள கடைகளில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் எந்த கடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்தனர். இனி புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என, கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை