உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராவல் மண் கடத்தல் இரு லாரிகள் பறிமுதல்

கிராவல் மண் கடத்தல் இரு லாரிகள் பறிமுதல்

தாராபுரம், தாராபுரம் அருகே, கிராவல் மண் கடத்திய இரு லாரிகளை, வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் அடுத்துள்ள ஜோதியம்பட்டியில், சண்முகசுந்தரம் என்பவருக்கு சொந்தமான இடத்தில், உரிய அனுமதி இன்றி கிராவல் மண் வெட்டி எடுக்கப்படுவதாக, வருவாய் துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு சென்ற தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள், அங்கு மண் எடுத்துக் கொண்டிருந்த இரு டிப்பர் லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, குண்டடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இது குறித்து வருவாய் துறையினர் அளித்த புகார்படி, குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்