மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
14-Aug-2024
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு, ஊர்வலமாக வந்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் - சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் முருகையா தலைமையில் மனு வழங்கி கூறியதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில், 20 ஆண்டுக்கு மேலாக பணியாற்றும் கடை ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். கடை ஆய்வில், விற்பனை விலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விற்பனையாளர், உதவியாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதுடன், மேற்பார்வையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிட மாறுதல், தண்டனை வழங்குவதில் முறைகேடு நடப்பதை தடுக்க வேண்டும்.மதுக்கூடங்கள், மதுக்கடைகளுக்கு உட்பட்டது. அங்கு நடக்கும் விதிமீறல் மீது கடும் நடவடிக்கை எடுத்து, உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மதுவிலக்கு கொள்கைப்படி தளர்வு நேரம் மதியம், 12:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை மட்டுமே என உள்ளது. ஆனால், மனமகிழ் மன்றம், எப்.எல்.2 பார்களுக்கு காலை, 11:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை என்பதை மாற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்.
14-Aug-2024