உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தந்தைக்கு பாட்டில் குத்து போதையில் மகன் வெறி

தந்தைக்கு பாட்டில் குத்து போதையில் மகன் வெறி

பவானி: அம்மாபேட்டை அருகே பி.கே.புதுார், போயர் தெருவை சேர்ந்த ஈஸ்வரன், 55; இவரது மகன் அசோக், 29; குடிப்பழக்கம் கொண்டவர். நேற்று முன்தினம் வீட்டு நடுவில் அமர்ந்து மது குடித்துள்ளார். இதை தந்தை ஈஸ்வரன் கண்டித்துள்ளார். இதனால் தகாத வார்த்தை பேசி, குடித்து கொண்டிருந்த பீர் பாட்டிலை உடைத்து, தந்தை ஈஸ்வரனின் வயிற்றில் குத்தினார். பலத்த காயமடைந்த ஈஸ்வரன், குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்படி, வழக்குப்பதிவு செய்த அம்மாபேட்டை போலீசார், அசோக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ