ஊரக வளர்ச்சி துறை அலுவலர் இரண்டாவது நாளாக போராட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்இரண்டாவது நாளாக போராட்டம்ஈரோடு, ஆக. 24-ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பஞ்., செயலர் பணியிடங்கள் உட்பட அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கலைஞர் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்கள் ஏற்படுத்தி நிரப்ப வேண்டும் என்பது உள்பட கோரிக்கையை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக நேற்றும், தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்றும், 641 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.