உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாரச்சந்தையில் மீண்டும் ஜவுளி விற்பனை மந்தம்

வாரச்சந்தையில் மீண்டும் ஜவுளி விற்பனை மந்தம்

ஈரோடு, ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதி கனி மார்க்கெட், அதற்கு வெளியே வாரச்சந்தை கடைகளில் நேற்று ஜவுளி சந்தை நடந்தது. இவ்வளாகத்தை சுற்றிய வீதிகளிலும் உள்ள டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு சாலை, பனியன் மார்க்கெட் ஜவுளி கடைகள் அமைத்து வியாபாரம் நடந்தது.இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: கடந்த வாரம் வரை பள்ளிகள் திறப்பு, முகூர்த்த சீசனால் ஜவுளி விற்பனை ஓரளவு ஆனது. அதற்கு முந்தைய வாரங்களில் நடந்த விற்பனையை விட ஓரளவு ஆயத்த ஆடைகள், சீருடை, துண்டு உள்ளிட்ட பயன்பாட்டு துணிகள் விற்பனையானது. ஆனால் நேற்று வெயில் அதிகமாக இருந்ததுடன், தமிழகத்தில் பிற பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா உட்பட பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள், கடைக்காரர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்தனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பனியன், ஜட்டி, யூனிபார்ம் துணிகள், ரெடிமேட் யூனிபார்ம் துணி செட்கள் ஓரளவு விற்பனையானது. துண்டு, பெட்ஷீட், லுங்கி, வேட்டி, நைட்டியும் ஓரளவு விற்பனையானது. ஆனால் மொத்த விற்பனை மிகவும் மந்தமாக நடந்தது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை