உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரண்டாம் கட்டமாக இ.வி.எம்.,கள் ஒதுக்கீடு

இரண்டாம் கட்டமாக இ.வி.எம்.,கள் ஒதுக்கீடு

ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவை, இரண்டாம் கட்டமாக கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா முன்னிலையில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தனர். மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதியில் உள்ள, 2,222 ஓட்டுச்சாவடிகள் மற்றும் கூடுதலாக, 20 சதவீத ஓட்டுச்சாவடி என, 2,530 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான இ.வி.எம்.,கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் தேர்தல் ஆணைய இணைய தளம் மூலம் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த தாலுகா அலுவலகத்துக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.குமாரபாளையம் தொகுதிக்கு, 668 இ.வி.எம்.,கள் - 334 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 362 வி.வி.பேட்; ஈரோடு கிழக்கில், 568 இ.வி.எம்.,கள் - 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 வி.வி.பேட் அனுப்பி வைத்துள்ளனர். ஈரோடு மேற்கில், 724 இ.வி.எம்.,கள் - 362 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 392 வி.வி.பேட்; மொடக்குறிச்சிக்கு, 664 இ.வி.எம்.,கள், 332 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 360 வி.வி.பேட்; தாராபுரத்துக்கு, 720 இ.வி.எம்.,கள், 360 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 390 வி.வி.பேட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.காங்கேயம் தொகுதிக்கு, 712 இ.வி.எம்.,கள் - 356 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 386 வி.வி.பேட்கள், என, ஆறு தொகுதிக்கும் சேர்த்து, 1,688 ஓட்டுச்சாவடிக்கு, 4,056 இ.வி.எம்.,கள், 2,028 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,198 வி.வி.பேட்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தந்த தொகுதியில், எந்த ஓட்டுச்சாவடிக்கு எந்த இ.வி.எம்., மற்றும் இயந்திரங்கள் அனுப்பப்பட வேண்டும் என நேற்று கணினி மூலம் சுழற்சி செய்து, ஒதுக்கீடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை