உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாக்கெட்டில் ரேஷன் பொருள் வழங்குவதில் சிக்கல் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக செயலர் விளக்கம்

பாக்கெட்டில் ரேஷன் பொருள் வழங்குவதில் சிக்கல் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக செயலர் விளக்கம்

ஈரோடு: ''பாக்கெட்டில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் உள்ள சிக்-கல்கள் குறித்து, அது சார்ந்த துறைகளிடம் பேசி வருகிறோம்,'' என, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.ஈரோட்டில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், கூட்டுறவு துறையின் உற்பத்தி பொருளான மங்களம் மசாலா பொருட்கள், குடோன்கள், ஏல முறைகளை ஆய்வு செய்தோம். தற்போது அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை அடுத்து சம்பா சாகுபடி பணிகள் நடக்கும். அறுவடையின்போது நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து, நெல்லை கொள்முதல் செய்து, அரவை செய்து தயார்-படுத்த வேண்டும்.தமிழகத்தில் தற்போது, 2.24 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. தேர்தல் நேரத்தில், 3.01 லட்சம் பேர் புதிய கார்டுக்கு விண்ணப்-பித்து தற்போது அவை சரி பார்த்து, 2.8 லட்சம் கார்டு தயார் நிலையில் உள்ளது. இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும். கூட்டு-றவு கடன் இந்தாண்டு, 26 முதல், 30 வகையான கடன் வழங்கப்-படுகிறது. அதற்கான இலக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்-கப்பட்டுள்ளது. இதுவரை முதல் காலாண்டில், 2.78 லட்சம் பேருக்கு, 26,888 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விவசாய கடன், 16,500 கோடி ரூபாய், கால்நடைக்கு, 2,500 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாய கடனில் இது-வரை, 3.46 லட்சம் பேருக்கு, 3,081 கோடி ரூபாய் வழங்கப்பட்-டுள்ளது.ஈரோடு மாவட்டத்தின் வேளாண் கடன் இலக்கு, 1,140 கோடி ரூபாய். அதில், 171 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வரும் ஆண்டில் அதிகமாக கடன் வழங்-கப்படும். தமிழகத்தில்தான் மிக அதிகமாக, 380 குடோன்கள் உள்ளன. 20.44 லட்சம் டன் பொருட்கள் சேமிக்கும் வசதிகள் உள்ளன. ரேஷன் கடைகளில் தேர்தல் நேரத்தில் பருப்பு, பாமாயில் வரத்தில் தாமதமானது. தற்போது வழங்கி வரு-கிறோம். மாத தேவைக்கு, 20,000 டன் துவரம் பருப்பு, 2.36 கோடி பவுச் பாமாயில் ஆர்டர் போட்டு வாங்கி உள்ளோம். அடுத்த, 10 நாளில் இப்பிரச்னை தீரும்.தேவை அடிப்படையில், 4,536 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்-பட்டுள்ளன. தவிர, சொசைட்டிகள் லாபகரமானதாக செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவில் பல்வேறு கடன் வழங்குவதுடன், கல்வி கடனும் வழங்கப்படுகிறது. மஞ்ச-ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க கோரி உள்ளனர். இது-பற்றி வேளாண் ஆணையருக்கு தெரிவித்து, நடவடிக்கைக்கு யோசனை தெரிவிக்கப்படும்.கூட்டுறவு தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி, உறுப்பினர் சரி பார்ப்பு பணிகள் நடக்கிறது. ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் வழங்கும் திட்டத்தில், ஜி.எஸ்.டி., கட்டணம் வருவதால், அதுபற்றி அரசு பரிசீலித்து வருகிறது. அதில் சில சிக்கல்கள் உள்ளதால், அது தொடர்பான துறைக-ளிடம் பேசி வருகிறோம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை