உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்டம் முழுவதும் சிறப்பு கிராமசபை ஆடுகள் திருட்டு புகாரால் குளூர் பஞ்., கூட்டத்தில் பரபரப்பு

மாவட்டம் முழுவதும் சிறப்பு கிராமசபை ஆடுகள் திருட்டு புகாரால் குளூர் பஞ்., கூட்டத்தில் பரபரப்பு

கலைஞர் கனவு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு, ஏற்கனவே கட்டிய தொகுப்பு வீடு பராமரிப்பு தொகை வழங்குதல், பிளாஸ்டிக் கழிவு ஒழிப்பு, சுகாதாரம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறப்பு கிராமசபை கூட்டம், தமிழகம் முழுவதும் நேற்று நடந்துத. இதன்படி மொடக்குறிச்சி யூனியன் குளூர் ஊராட்சி கிராமசபை கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக ஈரோடு டவுன் டி.எஸ்.பி., ஜெய்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குளூர் ஊராட்சியில் கடந்த ஓராண்டில் மட்டும், 146 ஆடுகள் திருட்டு போயுள்ளன. கடந்த ஒரு மாதத்தில், 62 ஆடுகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். மக்களுடன் சேர்ந்து இரவு ரோந்தில் ஈடுபட்டும், களவாணிகளை பிடிக்க முடியவில்லை என்று, விவசாயிகள் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர். திருடு போன அனைத்தும் கிடாய்களாகும். ஒரு கிடாய் மதிப்பு, ௧௫ ஆயிரம் ரூபாய் இருக்கும். மொடக்குறிச்சி போலீசில் புகாரளித்தும் குற்றவாளிகள் பிடிபடவில்லை. ஆடு திருடும் கும்பலை கைது செய்ய, விவசாயிகள் டி.எஸ்.பி.,யிடம் வலியுறுத்தினர்.* பவானிசாகர் யூனியன் விண்ணப்பள்ளி ஊராட்சி கிராமசபை கூட்டம், தலைவர் ஜெயமணி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., சிவசங்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்திட கிராம அளவிலான குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகளிடம் வீடு கட்டுவதற்கு உரிய வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார். * சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சி கிராமசபை கூட்டம், தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர் கலந்து கொண்டார். கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான, 32 பயனாளிகள் புதிதாக வீடு கட்டுவதற்கும், ஏற்கனவே கட்டப்பட்ட பழைய தொகுப்பு வீடுகளுக்கு பழுது பார்த்தல் பணிக்கு, 47 பயனாளிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. * பவானி யூனியனுக்கு உட்பட்ட, 14 ஊராட்சிகள், சித்தோட்டில் மூன்று ஊராட்சிகள், அம்மாபேட்டையில் ஒன்பது ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் அந்தந்த பஞ்., தலைவர்கள் தலைமையில் நடந்தது. இதில் வரவு செலவு கணக்கு, வளர்ச்சி திட்டங்கள், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.-நிருபர் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை