உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.40.50 லட்சம் மோசடி பெண் மீது பெண்கள் புகார்

ரூ.40.50 லட்சம் மோசடி பெண் மீது பெண்கள் புகார்

ஈரோடு:ஈரோடு, சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு ரோடு பாபு மனைவி சீமா பதுால். ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:எனக்கும், அதே பகுதியில் வசித்த நடராஜன் மனைவி ஸ்ரீவித்யாவுக்கும் எட்டாண்டு கால நட்பு இருந்தது. வீட்டில் பணத்தை சேமித்து வைத்திருந்தேன். இதையறிந்த ஸ்ரீவித்யா அவசர தேவை இருப்பதாகவும், பணத்தின் மூலம் வருவாய் ஈட்ட வழி இருப்பதாக கூறி, 23 லட்சம் ரூபாயை ஓராண்டுக்கு முன் கடனாக பெற்றார். இதற்கு ஈடாக செக், ஆவணங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். அவருக்கு உடந்தையாக புவனேஸ்வரி, திவ்யா, சிலம்பரசன் இருந்துள்ளனர். என்னுடைய பணத்தை திரும்பி பெற்று தர வேண்டும். மோசடி செய்த ஸ்ரீவித்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.இதேபோல் ஸ்ரீவித்யா மீது, சூரம்பட்டி லட்சுமணன் வீதி செல்வராஜ் மனைவி மணிமேகலை, 9 லட்சம் ரூபாய்; சூரம்பட்டி வலசு, அணைகட்டு ரோடு ஜான்பாட்சா மனைவி யாஸ்மின், 5 லட்சம் ரூபாய்; சென்னிமலை, சபீர் மனைவி ரிஸ்வானா, 3.50 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி