உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 100 நாள் வேலையாட்களுக்கு 8 வாரமாக கூலி வராத நிலை

100 நாள் வேலையாட்களுக்கு 8 வாரமாக கூலி வராத நிலை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், 100 நாள் திட்டப்பணி செய்யும் பயனாளிகளுக்கு, எட்டு வாரங்களாக நிலுவையில் உள்ள கூலியை வழங்க கோரி, தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் முருகன் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கினர்.மனுவில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துக்களில், 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு, 8 வாரங்கள் வரை, செய்த வேலைக்கான கூலி இன்னும் வழங்கப்படவில்லை.இத்திட்டம் மூலம் தொடர்ச்சியாக வேலையும் வழங்கப்படுவதில்லை. ஒரு வாரம் விட்டு, ஒரு வாரம் மட்டுமே வேலை வழங்க அரசு அனுமதிக்கிறது. அவ்வாறு வழங்கப்பட்ட வேலைக்கான கூலியும், 8 வாரங்களாக வழங்கப்படவில்லை. இதனால் குடும்ப செலவுகளை ஈடுகட்ட முடியாமல், கிராமப்புற தொழிலாளர்கள் பரிதவிக்கின்றனர். வரும் நாட்களில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. இந்த செலவுக்காக, இக்கூலியையே மக்கள் நம்பியுள்ளனர். எனவே, கூலியை வழங்க தேவையான நிதியை அரசு விடுவிக்க, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை