உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நான் முதல்வன் திட்டத்தில் 10,638 மாணவர்கள் பயன்

நான் முதல்வன் திட்டத்தில் 10,638 மாணவர்கள் பயன்

ஈரோடு : தமிழகத்தில் மாணவ, மாணவியரின் தனித்திறனை அடையாளம் கண்டு, ஊக்கப்படுத்தும் வகையில், 'நான் முதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 2022ல் துவங்கப்பட்ட இத்திட்டம் பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான வழிகாட்டுதலை வழங்குவது நோக்கமாக உள்ளது. இத்திட்டத்தில் கல்லுாரி மாணவர்கள், 28 லட்சம் பேர் பல்வேறு திறன் சார்ந்த பயிற்சி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்ட அளவில், 2023-24ல் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்த, 10,638 மாணவ, மாணவியர் உயர் கல்வி பயில பயன் பெற்றுள்ளனர். அதுபோல கலை அறிவியல் கல்லுாரிகளை சேர்ந்த, 328 பேர்; பொறியியல் கல்லுாரிகளை சேர்ந்த, 46 பேர் கடந்த கல்வி ஆண்டில் வேலை வாய்ப்பு ஆணை பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ