உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டில் 16 பவுன் திருட்டு

ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டில் 16 பவுன் திருட்டு

ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டில் 16 பவுன் திருட்டுசென்னிமலை, நவ. 10-சென்னிமலையில், பெருந்துறை பிரதான சாலையில் உள்ள வண்ணாம்பாறையில் வசிப்பவர் மூர்த்தி, 35; பெருந்துறையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மனைவியுடன் நேற்று காலை வழக்கம்போல் கடைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த மூர்த்தியின் தாயார் பழனியம்மாளும் தோட்டத்துக்கு சென்று விட்டார். மதியம், 2:௦௦ மணியளவில் வீட்டுக்குள் புகுந்த ஆசாமிகள், பீரோவை உடைத்து, தங்கச்சங்கிலி, வளையல் உள்பட, 16 பவுன் நகை, வெள்ளி பெருட்களை திருடி சென்றுள்ளனர். பழனியம்மாள் வீடு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகனுக்கு தகவல் தர விரைந்து வந்தார். மூர்த்தி புகாரின்படி சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை