உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி அருகே 160 கிலோ குட்கா வேனுடன் பறிமுதல்

கோபி அருகே 160 கிலோ குட்கா வேனுடன் பறிமுதல்

கோபி, கோபி அருகே பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில், கோபி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வந்த ஆம்னி வேனில் சோதனையிட்டனர். வெள்ளை சாக்குப்பையில், பத்து கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. காரை ஓட்டி வந்தவர், கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூரை சேர்ந்த சண்முகம், 35, என தெரிந்தது. அவரை கைது செய்து விசாரித்த போலீசார், அவரின் வீட்டில் இருந்து, 150 கிலோ புகையிலை பொருட்களை, ஆம்னி வேனுடன் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ