மேலும் செய்திகள்
டூவீலர் மீது வேன் மோதி தொழிலாளி பலி
18-May-2025
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம் பஞ்., பாரதிநகர் அருகில் தோட்ட பகுதியை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி. இவர் நிலத்தின் அருகில் வருவாய் துறைக்கு சொந்தமான வாரி புறம்போக்கு நிலம், 56 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து, தென்னங்கன்று வளர்த்து வந்தார். கடந்த பிப்., மாதம் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் கொடுத்திருந்தனர். நேற்று முன்தினம் வருவாய் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்ய சென்றனர். ஆனால், பொன்னுசாமி மகன்கள் ஜீவானந்தம், 40, மகேசன், 35, தடுத்து பணி செய்ய விடாமல் தடுத்தனர். அதிகாரிகள் தகவலின்படி சென்ற சத்தி போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
18-May-2025