உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

கல்லுாரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

ஈரோடு:அறச்சலுார், குமாரபாளையம் காலனியை சேர்ந்தவர் நதியா, 17; கலை அறிவியல் கல்லுாரி மாணவி. தினமும் பஸ்சில் கல்லுாரி சென்று வந்தார். கடந்த, 17ல் மீனாட்சிபுரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றவர், மறுநாள் காலை வீட்டுக்கு செல்வதாக கூறி பஸ் ஏறியுள்ளார். ஆனால், வீட்டுக்கு செல்லவில்லை. தந்தை ஆறுமுகம் புகாரின்படி அறச்சலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.*சிவகிரி, தாண்டாம்பாளையம், சடையப்ப நகரை சேர்ந்தவர் மைதிலி, 17; பனியன் கம்பெனி தொழிலாளி. கடந்த, 18ம் தேதி நள்ளிரவில் பாத்ரூம் சென்று வருவதாக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை ரங்கசாமி புகாரின்படி, சிவகிரி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை