உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 3 ஆண்டில் 26 கோடி முறை பயணம்

3 ஆண்டில் 26 கோடி முறை பயணம்

ஈரோடு : தமிழகத்தில் பெண்களுக்கு அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லா பயண திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் அனைத்து மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய முடியும்.இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும், திட்டம் தொடங்கப்பட்ட மூன்றாண்டுகளில், 26 கோடியே, 86 லட்சத்து, 90 ஆயிரம் முறை மகளிர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். திருநங்கைகள், 13 லட்சம் முறையும், மாற்றுத்திறனாளிகள், 16 லட்சத்து, 39 ஆயிரம் முறையும் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்