உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேக கட்டுப்பாட்டு கருவியை துண்டித்து இயக்கிய 3 மினி பஸ்கள் சிக்கின

வேக கட்டுப்பாட்டு கருவியை துண்டித்து இயக்கிய 3 மினி பஸ்கள் சிக்கின

ஈரோடு: ஈரோட்டில் வேக கட்டுப்பாட்டு கருவியை துண்டித்து இயக்கிய, மூன்று மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே மினிபஸ், பைக் மீது மோதிய விபத்தில் பிரியா, 20, நேற்று முன்தினம் பலியானார். மினி பஸ்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதே, விபத்துக்கு காரண் என்று புகார் எழுந்தது. இதுகுறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவுப்படி, ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன் தலைமையில், கிழக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து சூரம்பட்டி சாலையில் இயக்கப்படும், 15 மினி பஸ்களை நேற்று ஆய்வு செய்தார். இதில் மூன்று பஸ்களில் வேக கட்டுப்பாட்டு கருவி இணைப்பை துண்டித்து இயக்கியது தெரியவந்தது. அவற்றுக்கு அபராதம் விதித்தார். மூன்று பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை