மேலும் செய்திகள்
பனை மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிராக நிலக்கடலை
25-Oct-2024
4 ஏக்கர் நிலக்கடலை பயிர்காட்டுப்பன்றிகளால் சேதம்புன்செய் புளியம்பட்டி, நவ. 3-புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், மானாவாரியாக நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 20க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் புங்கம்பள்ளி கிராமத்துக்குள் புகுந்தது. வேலுசாமி என்பவரின் இரண்டு ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்தியது. இதேபோல துரைசாமியின் ஒரு ஏக்கர் நிலம், கொண்டையம்பாளையத்தில் குமரவேலின் ஒரு ஏக்கர் நிலத்திலும் அறுவடைக்கு தயாராக இருந்த நிலக்கடலை பயிரை தின்றும், தோண்டியும் சேதம் செய்தன. விவசாயிகளின் புகாரின்படி விளாமுண்டி வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நான்கு ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலக்கடலை பயிர் சேதமானதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25-Oct-2024