உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெவ்வேறு விபத்துகளில் ஒரே நாளில் 4பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் ஒரே நாளில் 4பேர் பலி

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடந்த வாகன விபத்துகளில் நான்கு உயிரிழப்புகளும், 10 பேர் காயமும் அடைந்தனர்.* அந்தியூர், செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ், 25; ஹோண்டா ஷைன் பைக்கில் முத்துார் சாலை கந்தம்பாளையத்தில் நேற்று முன்தினம் சென்றார். எதிரே ஹீரோ ஸ்கூட்டரில் அதிவேகமாக, கவனக்குறைவாக காங்கேயம், பழனிகவுண்டன் வலசை சேர்ந்த கருப்புசாமி, 35, வந்து மோதினார். இதில் விக்னேஷ் பலியானார். சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.* பாசூர், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பழனி, 65; சோளங்காபாளையம்-சோழசிராமணி சாலையில் நடந்து சென்றார். அப்போது அதிவேகமாக வந்த மாருதி சூசுகி ரிட்ஸ் கார் மோதியதில் உயிரிழந்தார். மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.* திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் நல்லிபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ், 37; ஹீரோ ஹோண்டா ஸ்ளெண்டர் பைக்கில் ஏழு வயது மகனுடன் திங்களூர்-பெருந்துறை சாலையில் தலையம்பாளையம் பிரிவு அருகே சென்றார். பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் யுவராஜ் பலியானார். ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில்லாமல் பல்வேறு விபத்துகளில், ௧௦ பேர் காயமடைந்ததாக, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை