| ADDED : ஜன 05, 2024 10:56 AM
ஈரோடு: ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார் போனது.இதைதொடர்ந்து ஈரோடு, முனிசிபல் சத்திரம் நேதாஜி சாலை, மைக்கேல் ராஜ் டீக்கடையில், சூரம்பட்டி போலீசார் நடத்திய சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர் மைக்கேல் ராஜை, 53, கைது செய்தனர். இதேபோல் சூரம்பட்டி வலசு அணைகட்டு ரோடு ஐந்தாவது வீதி முருகன் மளிகை கடை உரிமையாளர் முருகநாதன், 40; ஈரோடு, பச்சபாளியில் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்ற ஜேம்ஸை, 56, தாலுகா போலீசார் கைது செய்தனர்.ஈரோடு, மரப்பாலம் நால்ரோடு அருகே பெட்டி கடையில், புகையிலை பொருட்கள் விற்றதாக, நுார்ஜகான், 70; சோலாரில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற மகேந்திரன், 53, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.* டி.என்.பாளையத்தில் மளிகை கடையில், புகையிலை பொருட்களை விற்றதாக, ரங்கநாதன், 52, என்பவரை, பங்களாபுதுார் போலீசார் கைது செய்தனர்.