கோபி: கோபி தாலுகாவில் சராசரி மழையளவுடன் ஒப்பிடுகையில், கடந்த 2025ல், ஓராண்டில், 77 மி.மீ., மழை குறைவாக பொழிந்துள்ளது.கோபி தாலுகாவில், மாதந்தோறும் பெய்ய வேண்டிய, சராசரி மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜன.,18.5 மி.மீ., பிப்., 14.5, மார்ச், 21.6, ஏப்., 54.9, மே.,90.4, ஜூன், 37.1, ஜூலை, 40.4, ஆக., 75.4, செப்., 100.3. அக். 191.5, நவ., 118.6, டிச., 22.1 என மொத்தம் 12 மாதங்களில், 785.3 மி.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால் கோபி தாலுகாவில், கடந்த, 2025ல், ஜனவரியில், 13.2 மி.மீ., மழை பெய்தது. பிப்ரவரியில் ஒரு நாள் கூட மழை பெய்யவில்லை. மார்ச்சில், 28.4, ஏப்., 177.4, மே., 62.8, ஜூன், 70.8, ஜூலை, 13.6, ஆக., 42.4, செப்., 50.6, அக்., 202.4, நவ., 33.1, டிச., 13.4 மி.மீ., என மொத்தம், 708.10 மி.மீ., மழை பெய்துள்ளது. அதை சராசரி மழையளவுடன் ஒப்பிடுகையில், கடந்த 2025ல், 77 மி.மீ., மழையளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.