உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் 75 வயது தாய் கொலை மது குடிக்க பணம் தராததால் மகன் வெறி

சென்னிமலையில் 75 வயது தாய் கொலை மது குடிக்க பணம் தராததால் மகன் வெறி

சென்னிமலை: சென்னிமலை அருகே மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில், தாயின் கழுத்தை கத்தியால் அறுத்து, மகன் கொலை செய்தார்.ஈரோடு மாவட்டம் சென்னிமலை, முகாசிபிடாரியூர் ஊராட்சி, கோவில்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவரின் மனைவி பாப்பாத்தி, 75; இவர்களின் மகன் பழனிச்சாமி (எ) குப்புசாமி, 46; விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார். தந்தை துரைசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.குப்புசாமியின் மனைவி சாவித்திரி. இவர்களின் மகன் மவுலீஸ்வரன், ௧௮; கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து தாய், மகன் திருப்பூருக்கு சென்று விட்டனர். இதனால் தாய் பாப்பாத்தியுடன், கோவில்பாளையத்தில் குப்புசாமி வசித்து வருகிறார்.குப்புசாமிக்கு மது குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு சொந்தமான காட்டை தாய் விற்றுள்ளார். இதில் தனக்கான பங்கு, ஐந்து லட்சம் ரூபாயை, குப்புசாமி ஏற்கனவே பெற்று செலவு செய்து விட்டார்.இந்நிலையில் நேற்று குடிக்க பணம் கேட்டு, தாயிடம் குப்புசாமி தகராறு செய்துள்ளார். மருமகள், பேரன் எதிர்காலத்துக்குத்தான் பணம் வைத்துள்ளேன். உனக்கு தர முடியாது என்று மூதாட்டி தெரிவித்தார்.இதனால் ஆத்திரமடைந்த குப்புசாமி, தாயின் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் இறந்தார். இதைப்பார்த்த குப்புசாமி ஓடி விட்டார். சென்னிமலை போலீசார் குப்புசாமியை தேடி வருகின்றனர். தாயை மகன் கொன்ற சம்பவம், சென்னிமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை