உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோடைக்கு ஏற்ற புதிய நிலக்கடலை ரகம்; ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூலுக்கு யோசனை

கோடைக்கு ஏற்ற புதிய நிலக்கடலை ரகம்; ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூலுக்கு யோசனை

ஈரோடு: கோடை காலத்துக்கு ஏற்ற புதிய நிலக்கடலை ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், விதை பண்ணையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டாரம் காஞ்சிகோவில் கிராமத்தில், ஒரு தோட்டத்தில் 'ஜிஜி34' என்ற புதிய ரக நிலக்கடலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம், பண்ணையை ஆய்வு செய்து கூறியதாவது: கோடை காலத்துக்கு ஏற்ற 'ஜிஜி34' என்ற ரகம், 111 நாட்கள் முதல், 125 நாட்களில் அறுவடைக்கு வரும். அதிக எண்ணெய் திறன் (52.82 சதவீதம்) மற்றம் புரதச்சத்து (26.38 சதவீதம்) கொண்டது. டிக்கா இலைப்புள்ளி நோய், துரு நோயை தாங்கி வளரக்கூடியது. ஒரு ஏக்கருக்கு சராசரியாக, 1,000 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. இவ்வாறு கூறினார். விதைச்சான்று அலுவலர்களுக்கு, ரகங்களின் மகசூல் திறன், குணாதிசயங்கள், வயலாய்வு மேற்கொள்ளும் நடைமுறை, கலவன்களை கண்டறியும் முறை குறித்து பயிற்சி, செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள், விதைச்சான்று அலுவலர் (தொழில் நுட்பம்) ராதா, உதவி விதை அலுவலர்கள் அசோக்குமார், ராஜா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ