உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் குளித்த தொழிலாளி மாயம்

வாய்க்காலில் குளித்த தொழிலாளி மாயம்

நம்பியூர்: நம்பியூர், பவர் ஹவுஸ் மேட்டை சேர்ந்த முருகன் மகன் ரமேஷ், 30; கட்டட தொழிலாளி. திருமணம் ஆகாதவர். நண்பர்கள் சூர்யா, சின்னச்சாமி ஆகியோருடன், நடுப்பாளையம் எல்.பீ.பி., வாய்க்காலில் குளிக்க நேற்று மாலை, 4:00 மணியளவில் சென்றார். நீச்சல் தெரியாத நிலையில், ஆழமான பகுதிக்கு சென்ற ரமேஷ் தண்ணீரில் மூழ்கினார். நண்பர்கள் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், நம்பியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். நம்பியூர் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் தேடும் பணி கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை