உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 3 பேர் பலி எதிரொலி முருகன் கோவிலை சுற்றி வாக்கிங் செல்ல அறிவுரை

3 பேர் பலி எதிரொலி முருகன் கோவிலை சுற்றி வாக்கிங் செல்ல அறிவுரை

மோகனுார், டிச. 2-'பொதுமக்கள், காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலை சுற்றி வாக்கிங் செல்ல வேண்டும்' என, மோகனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தெரிவித்துள்ளார். மோகனுார் தாலுகா, ராசிபாளையம் பஞ்., காட்டூர் ஏரியூரார் தோட்டத்தை சேர்ந்த மலையண்ணன், அவரது மனைவி நிர்மலா, காட்டூரை சேர்ந்த செல்லம்மாள் ஆகியோர், நேற்று காலை, வாக்கிங் சென்றனர். அப்போது, நாமக்கல்லில் இருந்து மோகனுார் வந்த ஆம்னி கார், மூவர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மூவரும் துாக்கிவீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் யாரும் சாலையில் வாக்கிங் செல்ல வேண்டாம் என, மோகனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: மோகனுார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மோகனுார் - நாமக்கல் சாலை, மோகனுார் -ப.வேலுார் சாலையில், அதிகாலையில் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அது, அவர்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. மோகனுார் காந்தமலை பாலசுப்மணிய சுவாமி கோவிலை சுற்றிலும், வாக்கிங் செல்லும் வகையில், சாலை வசதியும், மின் விளக்கு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாக்கிங் செல்லலாம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை