உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொதுத்தேர்வு ஆசிரியர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு

பொதுத்தேர்வு ஆசிரியர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு

ஈரோடு:பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 1ம் தேதி, பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதி தொடங்குகிறது.பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 1,641 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது: அறை கண்காணிப்பாளர்கள், 1,160 பேர், பறக்கும் படை உறுப்பினர்கள், 375, துறை அலுவலர்கள், 106 பேர் பணியாற்றுவர். ஸ்கிரைபர் (சொல்வதை கேட்டு எழுதும் ஆசிரியர்கள்) எண்ணிக்கை இறுதி செய்யப்படவில்லை.இறுதி நேர மாற்றத்துக்கும், தேவையான ஆசிரியர்கள் காத்திருப்பில் உள்ளனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்