உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானை தாக்கி மூதாட்டி பலி

யானை தாக்கி மூதாட்டி பலி

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே, யானை தாக்கியதில் மூதாட்டி உயிரி-ழந்தார்.ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கரிக்கல் மாதையன் கோவில் வனப்பகுதியில், விறகு எடுப்பதற்-காக சென்ற புஞ்சை துறைபாளையம் அண்ணா நகர் எஸ்.டி கால-னியை சேர்ந்த மணியம்மாள், 63, என்பவரை நேற்று மதியம் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.நேற்று காலை, அப்பகுதி பெண்களுடன் வனப்பகுதிக்குள் மணி-யம்மாள் சென்றுள்ளார். சில மணி நேரத்திற்கு பிறகு, விறகு எடுக்க சென்ற பெண்கள் வீடு திரும்பிய நிலையில் மணியம்-மாளை காணவில்லை. இதுகுறித்து, டி.என்.பாளையம் வனத்து-றையினர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்த போது, மணியம்மாள் யானை தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. பங்களாப்புதூர் போலீசார் இறந்து கிடந்த மணியம்மாளின் உடலை மீட்டு, ஆம்-புலன்ஸில் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மணியம்மாளின் கணவர் மணி ஏற்கனவே இறந்த விட்ட நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை