மேலும் செய்திகள்
பணியாளர்களுக்கு சீருடை, இனிப்பு வழங்கல்
16-Oct-2025
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், உழைப்போர் உரிமை இயக்க மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், 200க்கும் மேற்பட்டோர் மனு வழங்கி கூறியதாவது:அனைத்து நிலை உள்ளாட்சி துறைகளின் கீழ் பணி செய்யும் துாய்மை காவலர்களுக்கு மாதம், 12,792 ரூபாய், துப்புரவு பணியாளர்களுக்கு, 14,792 ரூபாய், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி இயக்குபவர்களுக்கு, 14,792 ரூபாய் என அரசாணைப்படி வழங்க வேண்டும். உள்ளாட்சிகளில் பணி செய்யும் துாய்மை பணியாளர்கள், தொடர்ந்து, 2 ஆண்டுகள் அல்லது, 480 நாட்கள் பணி செய்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கழிவுகளை அகற்றுதல், துாய்மை பணிகள் இயந்திர மயமாக்க வேண்டும். கையுறை, காலணி, இதர பாதுகாப்பு கருவி வழங்கி, மருத்துவ பாதுகாப்பு, கழிவறை, ஓய்வறை, குடிநீர், விடுப்பு வசதி வழங்க வேண்டும்.இப்பணியாளர்களுக்கு காற்றோட்டமான வசதி கொண்ட குடியிருப்புகள், உள்ளாட்சி துறையில் துாய்மை பணியில் ஈடுபடும் அனைத்து வகை பணியாளர்களின் வாரிசுகளுக்கும் கட்டணமில்லாமல் உயர் கல்வி, மாற்று அரசு வேலை வழங்க வேண்டும்.இக்கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் டிச.,. 2 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வோம்.இவ்வாறு கூறினர்.நிர்வாகிகள் கோவிந்தராஜ், பாலசுப்பிரமணி, புகழேந்தி, நாச்சிமுத்து, மாகாளி உட்பட பலர் பங்கேற்றனர்.
16-Oct-2025