உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 56 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்

56 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 56 கோவில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, நியமன ஆணையை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.ஈரோடு, திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், ஹிந்து சமய அற-நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, ஈரோடு மாவட்ட கோவில்களில் பரம்பரை முறை சாரா அறங்காவலர்களாக நியமிக்-கப்பட்டவர்களுக்கு, நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடை-பெற்றது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் நாகரத்தினம் முன்னிலை வகித்தார். மாவட்-டத்தில், 56 கோவில்களுக்கு புதிதாக பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, அமைச்சர் முத்து-சாமி நியமன ஆணைகளை வழங்கினார். ஏற்கனவே அறங்கா-வலர் குழு மற்றும் உறுப்பினர்களால், 389 கோவில்களுக்கு பரம்-பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்-டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்-கடாசலம், துணை மேயர் செல்வராஜ், ஹிந்து சமய அறநிலையத்-துறை துணை ஆணையர் நந்தகுமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ