உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளிகளில் கலை திருவிழா போட்டி துவக்கம்

பள்ளிகளில் கலை திருவிழா போட்டி துவக்கம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் அளவிலான கலை திருவிழா போட்டி துவங்கியது. பள்ளி மாணவ, மாணவிகளின் தனி திறனை வெளிப்படுத்தும் வகையில் கலை திருவிழா போட்டிகள் பள்ளி அளவில், வட்-டாரம், மாவட்டம், மாநில அளவில் நடத்தப்படுகிறது. குழு போட்டிகளும் நடக்கிறது. அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி-களில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை நடப்பாண்டு நடத்தப்படுகி-றது.சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற மைய கருவுடன் இந்தாண்டு கலை திருவிழா போட்டி நேற்று துவங்கியது. வரும், 30ம் தேதி வரை நடக்கிறது. அதன் பின் வட்டார அளவில் நடத்-தப்படும். ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகி-றது. ஈரோடு ப.செ.பார்க் தகைசால் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கு பானை வரைதல் போட்டி நடந்தது. இதில் ஏரா-ளமான மாணவிகள் பங்கேற்றனர். இதேபோல் பல்வேறு அரசு, நிதியுதவி பள்ளிகளிலும் கலை திரு-விழா போட்டி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை