உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சட்டசபை தேர்தல் தி.மு.க., கூட்டணிக்கு பேரிடியாக அமையும்

சட்டசபை தேர்தல் தி.மு.க., கூட்டணிக்கு பேரிடியாக அமையும்

ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் உள்ள கமல கணபதி கோவில் ஆண்டு விழா மற்றும் வாஜ்பாய் அரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. மந்திரிகள் வாய் கொழுப்புடன் பேசுகின்றனர். யார் கட்டுப்பாட்டில் யார் இருக்கிறார்கள் என, தெரியாத வகையில் வாய்க்கு வந்ததை பேசுகின்றனர். தி.மு.க., கூட்டத்தில் இலை போட்டு பீர் பாட்டிலை வைத்துள்ளனர். இதை விட கொடுமை என்ன உள்ளது. மக்கள் பிரச்னை, கட்சி பிரச்னை, மந்திரி பிரச்னை என, தி.மு.க., தலைமைக்கு திரும்பிய இடமெல்லாம் பிரச்னையாக உள்ளது.ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசி வருகின்றனர். இதற்கு, 2026ல் மக்கள் பாடம் புகட்டுவர். 200 சீட்டில் வெற்றி என கூறுகின்றனர். இதில், 2 மட்டும் எடுத்து விடுங்கள். மிச்சம் இருப்பது தான் தி.மு.க.,விற்கு கிடைக்கும். 34 அமைச்சர்களில் 20 பேர் மீது வழக்கு உள்ளது. கள்ளச்சாராய சாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுத்தனர். ஆனால் பிற பகுதிகளில், வெவ்வேறு காரணங்களால், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்கவில்லை.தி.மு.க., அரசை, வீட்டுக்கு அனுப்பாமல் விடமாட்டோம் என அரசு ஊழியர்கள் கூறி வருகின்றனர். வரும் சட்டசபை தேர்தல், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பேரிடியாக இருக்கும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை