| ADDED : ஆக 25, 2026 05:39 AM
பவானி: அம்மாபேட்டை வட்டார சுகாதாரத்துறை சார்பில், குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரத்ததான முகாம் நேற்று நடந்தது. பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர். ரத்ததானம் கொடுத்த, 114 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து வந்த அதிகாரிகள், முகாமில் சேகரிக்கப் பட்ட ரத்தத்தை கொண்டு சென்றனர். இது தேவை யான நேரத்தில், நோயாளிகளின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்று தெரிவித்தனர். நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் மாதேஷ்குமார், சித்தா டாக்டர் சங்கரலிங்கம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.