உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேளாண் விளை பொருட்களுக்கு அக்மார்க் சான்று பெற அழைப்பு

வேளாண் விளை பொருட்களுக்கு அக்மார்க் சான்று பெற அழைப்பு

ஈரோடு:ஈரோடு மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (விற்பனை மற்றும் வணிகம்) மாரிமுத்து, செய்திக்குறிப்பில் கூறியதாவது:வேளாண் விற்பனை மற்றும் ஆய்வுத்துறை மூலம், அக்மார்க் அலுவலகம் செயல்படுகிறது. தற்போது அக்மார்க் தர நிலையில், 248 வகை அத்தியாவசிய வேளாண் பொருட்களுக்கு ஆய்வகங்கள் மூலம் ஆய்வு செய்து, தரச்சான்று வழங்கப்படுகிறது. தமிழகத்தில், ஈரோடு-1 (திண்டல்-போன்: 9842370603), ஈரோடு-2 (சூரம்பட்டி-போன்: 9677816715), பெருந்துறை (9488911262), சித்தோடு (9489362672) உட்பட, 30 அக்மார்க் ஆய்வகங்கள் செயல்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் துாள், நெய், தேன், தாவர எண்ணெய் வகைகளான சூரியகாந்தி, நிலக்கடலை, எள், தேங்காய், பயறு வகைகள், சிறு தானியங்கள், கரும்பு சர்க்கரை, முட்டை போன்றவற்றுக்கு அக்மார்க் அங்கீகார சான்று வழங்கப்படுகிறது.நான்கு அக்மார்க் ஆய்வகங்களில் கடந்தாண்டு, 3,814 மாதிரிகள் பகுப்பாய்வு செய்து, அக்மார்க் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அங்கீகார சான்று பெற இணைய தளத்தில், www.dmi.gov.inமற்றும் கட்டணம், 10,000 ரூபாயை, www.bharatkosh.gov.inஎன்ற இணைய தளம் மூலம் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ