கபடி பயிற்சியாளர் பதவி விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு:ஈரோட்டில் கபடி விளையாட்டுக்கான விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதில், 12 வயது முதல் 21 வயதுள்ள, 20 மாணவர், 20 மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரு மாதத்தில், 25 நாட்கள் தொடர்ந்து பயிற்சி வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு டிபன், பயிற்சி உபகரணங்கள், விளையாட்டு சீருடை வழங்கப்படும். இதற்கான பயிற்சி யாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 11 மாதங்களுக்கு பணி; மாத ஊதியமாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தேசிய விளையாட்டு மைய விளையாட்டு பயிற்சி பெற்று, இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஓராண்டு டிப்ளமோ சான்று, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை விளையாட்டு பயிற்சியில் முதுநிலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும். குவாலியர் லட்சுமி பாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தில் விளையாட்டு பயிற்சியில் முதுகலை டிப்ளமோ பெற்றவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வரும், ௨0ம் தேதி. நேர்முக தேர்வு, 24, 25ல் நடக்கும். விளையாட்டு வீரர், வீராங்கனை ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டரங்கில், 28ல் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்ப படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். விபரங்களுக்கு, 74017-30490 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.