உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அடிப்படை விசைத்தறி பயிற்சி பெற அழைப்பு

அடிப்படை விசைத்தறி பயிற்சி பெற அழைப்பு

ஈரோடு, ஈரோட்டில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், 'ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை மேம்பாட்டு மையத்தில்' அடிப்படை விசைத்தறி பயிற்சி அளிக்க தேவையான சாதா விசைத்தறி, டாபி, டெரி தறிகள் நிறுவப்பட்டுள்ளன.ஜவுளித்துறையில் திறமை வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கி, ஜவுளித்துறையை மேம்படுத்தும் நோக்கில், '2/118-ஏ, ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி, ஈரோடு-638009' என்ற முகவரியில் இயங்கும் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை மேம்பாட்டு மையத்தில் விசைத்தறி தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.இதில் ஆண், பெண் என இருபாலரும் பயிற்சி பெறலாம். வரும், 8ல் துவங்கும் ஒரு மாத கால பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை