மேலும் செய்திகள்
ஏர்போர்ட் திட்ட அனுமதி விண்ணப்பித்தது 'டிட்கோ'
22-Sep-2024
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் மீது வழக்கு ஈரோடு, அக். 11-கோபி, கருமாயா வீதியை சேர்ந்தவர் முகமது அலி, 64; கோபியை அடுத்த கலிங்கியம், நைனாம்பாளையத்தில், அரசு அனுமதியின்றி நான்கு கிலோ பட்டாசு வெடிமருந்து, 50 குச்சி, 400 கிராம் கரி மருந்து வைத்திருந்தார். அவர் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் நம்பியூரை அடுத்த எலத்துார் நாயக்கர் வீதி நடராஜ், 49; உரிய அனுமதியின்றி, 10 பெட்டிகள் பட்டாசு வைத்திருந்தார். அவர் மீது கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
22-Sep-2024